பாக்ஸ் ஆபிஸிலும் இப்பொழுது அவர்களுக்கு போட்டியாக, நாம் வளர்ந்து கொண்டு வருகின்றோம் , இந்த நிலையில் இந்த வருடம் இதுவரையில் பல படங்கள் திரை உலகிட்கு வந்துள்ளது.
இவற்றில் குறிப்பிட்ட ஹிட் கொடுத்த படங்கள் மற்றும் ரசிகர்களிடம் பேசப்பட்ட சில படங்களின் தமிழக வசூல் அனைத்தையும் இணைத்து தமிழகத்தில் எவ்வளவு வசூல் என்பதை இப்பொழுது பார்ப்போம்.
இந்த வருடம் (2019) ஆரம்பகட்டதத்திலேயே விஸ்வாசம், பேட்ட சேர்த்து தமிழகத்தில் மட்டுமே ரூ 240 கோடி பண வசூலை கொடுத்தது, இதுவரை ஆல் டைம் ரெக்கார்ட் என்றே கூறப்படுகின்றது.
இதை தொடர்ந்து வந்த எல்.கே.ஜி ரூ 14 கோடி, தில்லுக்கு துட்டு-2 ரூ 18 கோடி,தடம் படம் ரூ 22 கோடி, காஞ்சனா3 படம் - ரூ 72 கோடி, நேர்கொண்ட பார்வை படம் - ரூ 73 கோடி, கோமாளி படம் - ரூ 42 கோடி, நம்ம வீட்டு பிள்ளை படம் ரூ 60 கோடி, அசுரன் படம் ரூ 40 கோடி முறையே வசூல் செய்துள்ளது.
இந்த படங்களில் பாரியளவு வெற்றி பெறவில்லை என்றாலும், சூர்யாவின் காப்பான், என்.ஜி.கே இரண்டு படங்களும் சேர்த்து ரூ 78 கோடிகள் வரை வசூலித்துள்ளது.
இதன்மூலம் இதுவரை 2019ல் வெளியான படங்கள் அனைத்தையும் இணைத்து பார்த்தோமானால் தமிழக வசூல் மட்டுமே ரூ 700 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இன்னும் எனை நோக்கி பாயும் தோட்டா, பிகில், ஹீரோ, சூரரைப் போற்று ஆகிய படங்கள் வர இருப்பதால் , கண்டிப்பாக இந்தவருடம் ரூ 900 கோடிக்கு மேல்லாக தமிழக பாக்ஸ்ஆபிஸ் மட்டுமே இருக்கும் என்று எதிர்ப்பார்க்க ப்டுகின்றது.
No comments:
Post a Comment